அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா என அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் “மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி. 'குப்பை கொட்டவும் வரி' அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் வேலுமணி. அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? எண்ணித்துணிக கருமம்!” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மின் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்ற உத்தரவையும், குப்பைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உத்தரவையும் தமிழக அரசு ரத்து செய்தது.