கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்து பேசினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாய் ஒச்சம்மாள் கடந்த 30ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு ஆறுதல் கூற மு.க.அழகிரி இன்று காலை அவரது வீட்டுக்கு வந்தார். செல்லூர் ராஜூவின் தாய் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி அழகிரி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் சிறிது நேரம் அவர் பேசினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மு.க.அழகிரிக்கு சாதகமாக பேசி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. பின்னர் வெளியே வந்த அழகிரி, செய்தியாளர்களிடம் பேசும்போது, அமைச்சர் செல்லூர் ராஜூக்கு ஆறுதல் கூறுவதற்காகவே அவரது இல்லத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.