தமிழ்நாடு

சென்னை: சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த சொகுசு கார்  

சென்னை: சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த சொகுசு கார்  

கலிலுல்லா

சென்னை சைதாப்பேட்டையில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சைதாப்பேட்டை அண்ணாசாலையில் சென்றபோது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வெளிவந்துள்ளது. இதனால் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கிய சில நிமிடங்களில் காரின் முன்பகுதி தீபிடித்து எரிந்தது. தகவல் அறிந்து 3 வாகங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும் காரின் முன்பகுதி எரிந்து சேதமாயின. விசாரணையில் சொகுசு காரை வடபழனியில் சர்வீஸ் செய்துவிட்டு சின்னமலையில் உள்ள நிறுவனத்துக்கு சென்றப்போது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.