5 நாட்களாக நடைபெற்று வந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள், மண்டல வாரிய டெண்டர் நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 14-ம் தேதி மும்பையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். வேலை நிறுத்த போராட்டத்தால் தினசரி 13 ஆயிரம் டன் கேஸ் ஏற்றி செல்லும் பணி பாதிக்கப்பட்டது. சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி இருந்த நிலையில் தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எங்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்ததை அடுத்து வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். லாரிகள் உடனடியாக இயக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.