மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்றுகாற்றழுத்த தாழ்வு பகுதிஉருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகாற்றழுத்த தாழ்வு மண்டலமாகவலுப்பெற்று, வரும் அக்டோபர் 3ஆம்தேதி வாக்கில் ஒடிசா- ஆந்திராகடலோரப் பகுதியில் கரையை கடக்கும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் வரும் 4ஆம் தேதி வரைகனமழை பெய்யும் எனவும் வானிலைஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழககடலோரப் பகுதிகளான, மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியகுமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.