தமிழ்நாடு

உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம்

webteam

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நிவர் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இது தமிழக கடற்கரையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது

இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு புரெவி என பெயர் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது