சென்னை மடிப்பாக்கத்தில் ஒரே அறையில் காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் சங்கீதா, இவர் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சங்கீதாவும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு சங்கீதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான இருவரும் மடிப்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.