இன்சூரன்ஸ் தொகையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போராட்டத்தால் 10 ஆயிரம் கோடி ரூபாய் சரக்குகள் தேக்கமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவிலும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை கணிசமாக உயர்த்தியதற்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் உயர்த்தியதைக் கண்டித்தும் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, லாரிகளில் சரக்குகள் புக்கிங் செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.