தமிழ்நாடு

லாரி ஸ்டிரைக்: சென்னையில் காய்கறி விலை உயர்வு

லாரி ஸ்டிரைக்: சென்னையில் காய்கறி விலை உயர்வு

webteam

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நடந்து வரும் நிலையில் சென்னையில் காய்கறிகளின் விலை அதிகரித்துள் ளது.

நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், மூன்றாம் நபருக்கான காப்பீட்டுத்தொகையை குறைக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 250 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல், ஒரு நாளைக்கு சுமார் 5000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் காய்கறி விலை சற்றே உயர்ந்து காணப்படுகிறது. தக்காளி கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு 15 முதல் 21 ரூபாயாக இருக்கிறது. வெங்காயம் ஒரு கிலோ 17 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய் வரையும், முட்டைகோஸ் 8 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. கேரட் 40 ரூபாயாகவும், பீன்ஸ் 50 ரூபாயாகவும் இருக்கின்றன. முருங்கைக்காய், வெண்டைக்காய் கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.