தமிழ்நாடு

ஓட்டுநர் இல்லாமல் தாறுமாறாக ஓடிய லாரி

ஓட்டுநர் இல்லாமல் தாறுமாறாக ஓடிய லாரி

webteam

திண்டுக்கல் புறவழிச்சாலையில் விபத்துக்குள்ளான லாரி, ஓட்டுநர் இன்றி தாறுமாறாக ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

திண்டுக்கல் புறவழிச்சாலயில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புச் சுவரில் மோதியது. இதனையடுத்து அந்த வாகனத்தின் ஓட்டுநர் கீழே குதித்தார்.  ஓட்டுநர் இல்லாமல் அந்த வாகனம் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. முன்னும் பின்னும் சென்ற அந்த லாரியில் ஏறி அதனை கட்டுக்குள் கொண்டுவர ‌ஓட்டுநர் முயன்றார். ஆனால், அவரது முயற்சி பலனைத் தரவில்லை. லாரி சுற்றி வந்த வண்ணம் இருக்க, அதனுடன் ஓட்டுநரும் ஓடிய அந்தக் காட்சியை அவ்வழியே சென்றவர்கள் கைப்பேசியில் படம்படித்தனர்.