ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் விபத்துக்குள்ளான லாரி, தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது.
திம்பம் மலைப்பாதையில் 27-வது கொண்டை ஊசி வளைவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து ஏற்பட்ட போது, ஓட்டுநரும், உதவியாளரும் லாரியிலிருந்து குதித்து உயிர் தப்பினர். 5 மணி நேரமாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த லாரியை காவல்துறையினர் மீட்டனர். அதுவரை திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.