தமிழ்நாடு

அக்கா மகனை கூலிப்படையை வைத்து கொன்ற தாய்மாமன்

webteam

நாகை மாவட்டத்தில் லாரி ‌ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தாய்மாமன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த அதிமானபுருஷன் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி சித்ரா. சேட்டு, லாரி ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த மே 25ஆம் தேதி 7பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக வெட்டிக்கொன்றது. கணவரை காப்பாற்ற சென்ற சித்ராவையும் அந்தக்கும்பல் அரிவாளால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த சித்ரா, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். இதுதொடர்பாக மணல்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் சேட்டுவின் சொந்த தாய்மாமனே கூலிப்படையை வைத்து அவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்ட 7 நபர்களில், சேட்டுவின் தாய்மாமாவும், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரான காந்தி, காந்தியின் மருமகன் பாபு, பாபுவின் நண்பன் சக்தி, கூலிப்படையை சேர்ந்த கார்த்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மூவரை தேடிவருகின்றனர். அக்கா ‌மகன் சேட்டின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை கொலைசெய்ததாக காந்தி தெரிவித்துள்ளார்.