தமிழ்நாடு

மதுராந்தகம்: புறவழிச்சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது லாரி மோதி விபத்து

நிவேதா ஜெகராஜா
மதுராந்தகம் புறவழிச்சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் புறவழி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சூழலை சமாளிக்க மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழிச்சாலையிலுள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது கண்டெயினர் லாரியொன்று. அதன் பின்னால் வந்த டாரஸ் லாரி, கண்டெயினர் லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் டாரஸ் லாரி முன்பகுதி சேதம் அடைந்தது. மேலும் அதன் ஓட்டுநர் இருவாகனத்திர்க்கு இடையே சிக்கிக்கொண்டார்.
இந்த விபத்தினால் அப்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் போலீசார், புறவழி சாலையில் செல்லும் வாகனத்தை மதுராந்தகம் பஜார் வழியாக மாற்று வழியில் வாகனங்களை இயக்கினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.