தமிழ்நாடு

லாரி-கார் மோதல், 6 பேர் பலி: அதிகாலையில் பயங்கரம்!

லாரி-கார் மோதல், 6 பேர் பலி: அதிகாலையில் பயங்கரம்!

webteam

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் பதூர் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
இறந்தவர்கள் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த வெங்கடேசன், உமா மற்றும் அம்பத்தூரை சேர்ந்த மீனா, ரமேஷ்கண்ணா, சுகுணா, ஓட்டுனர் பிரசாந்த் ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களுடன் பயணித்த மற்றொரு பெண் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.