கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் சென்றவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் தறிகெட்டு ஓடியது.
இதைப்பார்த்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் பைக், கார், நடந்து சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் நடந்து சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லாரியின் பிரேக் கட் ஆனதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரும் கார் ஓட்டனர் ஒருவரும் என மொத்தம் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். இனி யாரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும்போது அதன் அருகே செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.