கிருஷ்ணகிரி மாவட்டம் நக்கல்பட்டி கிராமத்தில் கிரானைட் கற்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் இருந்து நக்கல்பட்டி வழியாக கிரானைட் கற்களை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் இருந்த பள்ளத்தில் சக்கரம் சிக்கியதால் தடுமாறிய அந்த லாரி, சாலை ஓரத்தில் இருந்த வீட்டுத் திண்ணையில் கவிழ்ந்தது. அப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த 2 சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். முதியவர் சந்திரா என்பவரின் கால்கள் முறிந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிரேன் மூலம் கற்களை நகர்த்தி உடலை மீட்டனர். விபத்து குறித்து லாரி ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.