தமிழ்நாடு

தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டல்

webteam

நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி நகையைப் பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் அன்னபூரணி. இவர் வீட்டில் தனியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது துணியால் முகத்தை மறைத்தபடி வந்த நபர் ஒருவர் கத்தியைக்காட்டி, அன்னபூரணியிடம் நகையைப் பறிக்க முயன்றுள்ளார். இதனால் அன்னப்பூரணி கூச்சலிட்டுள்ளார். 

அதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் அன்னபூரணி வீட்டுக்குவர, அந்த நபர் தப்பியோடி உள்ளார். அவரைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள், அங்கேயே கட்டி வைத்தனர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினர் நகையைப் பறிக்க முயன்ற நபரை கைது  செய்ததுடன், அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.