விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், முதலமைச்சரால் திறக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனத் துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சிவகாசி நகராட்சியில் பணிபுரியும் துப்புறவு தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகளைக் கடந்த அக்டோபரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பூட்டியே கிடக்கும் குடியிருப்பு பகுதிகளில் புதர் மண்டி கிடப்பதாகவும், சிலர் அங்கு அமர்ந்து மது அருந்துவதாகவும் கூறுகின்றனர். வாடகை வீடுகளில் குடியிருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் குடியிருப்புகளை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என துப்புறவு தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டதற்கு, இன்னும் சில நாட்களில் குடியிருப்புகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார்.