போலீஸ் காவலில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் சாயப்பட்டறையிலிருந்து துணி பண்டல்களை திருடிச் சென்றதாகத் தேனி பங்களாபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சஞ்சீவி என்பவர் திருப்பூர் வேலம்பாளையம் காவல் நிலையத்தினரால் கைது செய்த நிலையில் திருப்பூர் கிளைச் சிறையில் நுரையீரல் நோயால் மரணமடைந்தார்.
சஞ்சீவியின் மனைவி சத்யாவின் புகாரில் அப்போதைய சிறப்பு உதவி ஆய்வாளர், கோவை டிஎஸ்பி சண்முகய்யா, கோவை மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் ஜெயசிங், திருப்பூர் கிளைச் சிறை உதவி ஜெயிலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது போலீஸ் காவல் மரணம் தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் போலீஸ் காவலில் உயிரிழந்த சஞ்சீவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தக் காவல் மரணத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறையைச் சேர்ந்த நால்வர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.