தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: அரசு, தனியார் கட்டடங்களில் விளம்பரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தல்: அரசு, தனியார் கட்டடங்களில் விளம்பரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம்

kaleelrahman

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் மற்றும் பதாகைகள் வைக்க மாநில தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இதன்படி அரசு தொடர்பான இடங்கள், அரசு கட்டட வளாகங்களில் சுவரொட்டி ஒட்டுதல், சுவரில் எழுதுதல், பதாகைகள் வைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் உரிமையாளரின் அனுமதி இருந்தாலும் அங்கு சுவரில் எழுதுவது, சுவரொட்டி ஒட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.