தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கலுக்கு அனுமதி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கலுக்கு அனுமதி

கலிலுல்லா

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது.

இந்நிலையில்,சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வேட்புமனுவை தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே தனியாக அனுமதிக்கப்படுவார் எனவும், வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கபட்டால் அவரை முன்மொழிபவர் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.