உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்காதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநில தேர்தல் ஆணையரும், செயலாளரும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் 18ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பை தமிழக அரசு வெளியிடாததால், திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த அவமதிப்பு வழக்கு இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையர், ஆணைய செயலாளர் நேரில் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.