தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம்

Rasus

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் நடைபெற்று வருகிறது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் உள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 107 இடங்களில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. அதில் அதிமுக கூட்டணி 59 இடங்களிலும், திமுக கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, 93 இடங்களில் முன்னிலை நிவலரம் தெரியவந்துள்ளது. திமுக கூட்டணி 57 இடங்களிலும், அதிமுக கூட்டணி 36 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.