ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள்? எந்தெந்த ஆவணத்தை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள், பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அட்டை இல்லை என்றால், ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம்.
இது தவிர, பொதுத்துறை வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களின் கணக்கு அட்டை, பான் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான அடையாள அட்டை, மத்திய மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுக்கான அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்களை, காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.