சென்னை பிராட்வே மண்ணடி சாலை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி பயிலும் மாணவர்கள் 22 பேர் இன்று காலை எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு வந்து காவல் நிலைய பணிகளை பார்வையிட்டனர்.
அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் மாணவர்களை வரவேற்று காவலர்களின் பணிகள், துப்பாக்கி போன்றவற்றை மாணவர்களுக்கு காண்பித்தனர். மேலும் காவல் பணி குறித்து ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
காவல் நிலையத்திற்கு வந்த மாணவர்கள் உற்சாகமாக காவலர் பணிகளை கேட்டு சென்றனர். காவலர்கள், மாணவர்களுக்கிடையே நடந்த இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.