அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

🔴 LIVE | தவெக தலைவர் விஜய் பங்கேற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியிட்டு விழா!

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்கிறார். அவர் புத்தகத்தை வெளியிட, அதனை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற உள்ளார். இதன் அப்டேட்களை, முழுமையாக இங்கே காணலாம்...

ஜெ.நிவேதா

முக்கியத்துவம் பெற்ற நூல் வெளியீட்டு விழா!

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான இன்று அவர் தொடர்பான நூல் ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்வு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று நடைபெற உள்ள அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்கிறார். ஆனந்த விகடன் மற்றும் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனமும் இணைந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை தயாரித்துள்ளனர்.

அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழா

இந்த நூலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன், ஆதன் அர்ஜுனா உட்பட 36பேர் பங்காற்றியுள்ளனர். இன்று நடைபெறும் விழாவில் விஜய் பங்கேற்று, அம்பேத்கர் நூலை வெளியிடுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலில் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பின்னர் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. விஜய்யுடன் ஒரே மேடையை பகிந்து கொண்டால் தேவையற்ற அரசியல் யூகங்களுக்கு வழி வகுக்கும் என்பதால் திருமாவளவன் இந்த விழாவை புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.

வருகை தந்தார் விஜய்!

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில், புத்தகத்தை வெளியிட நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திற்கு வருகை தந்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

சற்று நேரத்தில் துவங்குகிறது புத்தக வெளியீட்டு விழா தொடங்க உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்வுகளை, உடனடியாக பெற, இணைந்திருங்கள்..

📸 With Ambedkar!

விழா நடைபெறும் இடத்தில், அம்பேத்கருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏதுவாக, ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமர்ந்து விஜய், ஆதவ் அர்ஜூனா என பலரும் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

நூல் வெளியீட்டு விழா அரங்கத்தில் விஜய்!

மேடையில் விஜய்

நூல் வெளியீட்டு மேடையில் விஜய்

தவெக தலைவர் விஜய்யிடம் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை அம்பேத்கரே வழங்குவது போன்ற AI வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து, விஜய் உட்பட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் மேடை ஏற்றப்பட்டுள்ளனர்.

நிகழ்வின் முழு வீடியோவை காண...

விழா மேடையில் விசிக தலைவர் ஆதவ் அர்ஜூனா...!

விழா மேடையில் விசிக தலைவர் ஆதவ் அர்ஜூனா, மேடையில் இருந்த அனைவருக்கும் வரவேற்பு தெரிவித்து பேசத்தொடங்கி உள்ளார். அவர் பேசுகையில், “கால சூழலால், மேடையில் அண்ணன் திருமாவளவன் இல்லை. ஆனால் அவரின் மனம் இங்கேதான் இருக்கிறது. பலரும் சகோதரர் விஜய்க்கு அரசியல் தெரியுமா, கொள்கை இருக்கிறதா என்கின்றனர். கொள்கை பேசும் கட்சிகள் ஏன் அம்பேத்கரை இதுவரை மேடை ஏற்றவில்லை?

AadhavArjuna

பட்டியலினத்தை சாராத ஒருவர், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது அண்ணன் திருமாவளவனின் கனவு. அது இந்த மேடையில் நனவாகியுள்ளது. புத்தகத்தை சகோதரர் விஜய் வெளியிடுகிறார். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தியவர் அம்பேத்கர். பிறப்பால் ஒருவருக்கு தலைமை பதவி கிடைக்கக்கூடாது. அதை 2026-ல் நடத்துவோம். 2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது” என்று உணர்வுபொங்க பேசினார்.

அவரின் முழு உரையை இங்கே காணலாம்...

புத்தகத்தை வெளியிட்டார் விஜய்! 

அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழா

த.வெ.க. தலைவர் விஜய் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை வெளியிட, அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும், மூன்றாம் பிரதியை ஆதவ் அர்ஜூனாவும், நான்காம் பிரதியை விகடன் குழுமத் தலைவர் சீனிவாசனும் பெற்றுக் கொண்டனர்.

விஜய் உரை!

தவெக தலைவர் விஜய், மேடையில் பேசி வருகிறார். அப்போது பேசுகையில், “கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு ‘200 வெல்வோம்’ என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை.

நீங்கள் உங்களோட சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்” என்றார்.

மேலும் பேசுகையில், “ஜனநாயகத்தின் ஆணிவேர் நியாயமான தேர்தல்; சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதாக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று போட்டோ எடுக்க முடியாது; சம்பிரதாய ட்விட், சம்பிரதாய அறிக்கை, சம்பிரதாய புகைப்படங்களில் எனக்கு உடன்பாடில்லை” என்றார் விஜய். முழு உரையை இங்கே வாசிக்கலாம்...:

நிகழ்ச்சி நிறைவு

விஜய் உரையை அடுத்து, நிகழ்ச்சி நிறைவுபெற்றது. நிகழ்வில், விஜய் பேசியதும், ஆதவ் அர்ஜூனா பேசியதும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.