தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. காய்கறிகளின் விலை நிலவரம்..!

கோயம்பேடு சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. காய்கறிகளின் விலை நிலவரம்..!

webteam

144 தடை உத்தரவால் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று விற்கப்படும் காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கமாக அமைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள்
நேற்று இரவே கூட்டம் கூட்டமாக அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் இருக்கும் மக்கள், நேற்று மாலையில் இருந்தே
அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் அலைமோதி வருகின்றனர். அந்த வகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக பார்க்கப்படும் கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காலை முதல் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை ஏற்ற, இறக்கங்களை கண்டுள்ளது.

தக்காளி, கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் உள்ளிட்டவற்றின் விலைகள் வழக்கத்தை விட சற்று உயர்ந்துள்ளது.

பீன்ஸ், கத்தரிக்காய் விலை சற்று குறைந்துள்ளது.

1கி வெங்காயம் ரூ.18 முதல் ரூ.2‌4 வரை‌ விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.25‌க்கு விற்கப்பட்ட 1கி தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


1கி கேரட் ரூ.20 விலை உயர்ந்து ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1கி பீட்ருட் ரூ.10 விலை உயர்ந்து ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1கி வெண்டைக்காய் ரூ.15 விலை உ‌யர்ந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1கி கத்தரிக்காய் ரூ.15 விலை குறைந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.