தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் அரசியல் ரீதியான செயல்பாடுகள், அவர் தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விஜய் மட்டுமல்ல... தனது ரசிகர்களின் செல்வாக்கால் அரசியலில் இறங்கிய முக்கிய நடிகர்கள் திரைத்துறையில் இருக்கிறார்கள். ஆக்டிங்கில் இருந்து அரசியல் கட்சித் தொடங்கிய நடிகர் யார்? விரிவாக இங்கே பார்க்கலாம்.
அரசியலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கியத் தொடர்பு உண்டு. ஏனென்றால் சினிமாவில் கோலோச்சிய பிரபல கலைஞர்கள்தான் பின்னாளில் தமிழகத்தில் ஆட்சி அரியாசனத்தில் முதலமைச்சர்களாக அமர்ந்திருக்கிறார்கள்.
வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் அதில், எம்ஜிஆர் எனும் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு முக்கிய இடம் இருக்கும். உச்சபட்ட மக்கள் செல்வாக்குடன் இருந்த எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே தனிப்பெரும் ஆளுமையாக அறியப்பட்டவர்.
இவரை தொடர்ந்து சிவாஜி வந்தார். இதற்கு பின் விஜயகாந்த், டி.ராஜேந்தர், பாக்யராஜ் என எண்ணற்ற நடிகர்கள் வந்தனர். அதில் கடைசியாக வந்தவர் நடிகர் கமல். இதற்குப்பின் இப்போது விஜய் வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.