டாஸ்மாக் மதுபானங்கள் உயர்த்தப்பட்ட விலையுடன் இன்று முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.
180 மில்லி அளவு கொண்ட குவார்ட்டர் ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்ற மது வகைகளின் விலை 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பீர் விலையில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. டாஸ்மாக் வருவாயை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், விற்பனையை கருத்தில்கொண்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலை உயர்வின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. 2014ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவார்ட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது.