தமிழ்நாடு

டோர் டெலிவரியில் மது: மக்கள் கவலை

டோர் டெலிவரியில் மது: மக்கள் கவலை

webteam

கொடைக்கானல் அருகே வீடு தேடி மதுவிற்பனை செய்யப்படும் அவலம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் நகரப் பகுதியில் 4 மதுக்கடைகள் உள்ளன. மக்களின் தேவை அறிந்து அரசு மதுபானக் கடைகளில் மொத்தமாக மதுவை வாங்கி, கிராம மக்களுக்கு வீடு தேடி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அரசு நிர்ணயித்த விலையை விட மூன்று மடங்கு அதிகமாக மது விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் கள்ளச் சந்தை வியாபாரிகள் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கொடைக்கானல் காவல் துறையினர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.