தமிழ்நாடு

`அக்கறை இருந்தால் அரசியல்வாதியாக இருக்க முடியுமா?'- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

webteam
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 29-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்…விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி… அக்கறையா? அரசியலா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வது வாடிக்கை தான். விளக்கங்களை நம்பித்தான் ஆகனும்.வேறு பிரச்சினை வரும் போது, இது மறந்து, மறைந்து விடும். யாருக்கும் பயப்படாமல், விமர்சனங்களுக்குப் பதில் கூறி,மறுமுறை செல்லும் போது கவனமுடன் இருப்பர். ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் எல்லாமே…

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது விமர்சிக்கப்பட்டவைகள், ஆளுங்கட்சி ஆனவுடன் சாதனைகளாக விளம்பரப் படுத்தப்படுகின்றன.
அக்கறை இருந்தால் அரசியல்வாதியாக இருக்க முடியுமா? ; கட்டாயம் அரசியல்தான்!

அரசு பயணத்திற்கு எதற்காக கட்சி செலவு செய்ய வேண்டும்???

கட்சி செலவில் பயணிக்கும் அதிகாரிகள் கட்சி சார்பின்றி செயல்படுவார்கள்????

அரசாளுகையில் கட்சியும், குடும்பமும் நெருங்கி இருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து...

அரசுமுறைப் பயணத்தை மனைவியோடு மட்டும் மேற்கொண்டிருந்தால் பல்வேறு சர்ச்சைகளை தவிர்த்திருக்கலாம்.

குடும்ப உறுப்பினர்கள், தனி விமானம், சர்ச்சையான பிறகு கட்சி செலவு என்று சொல்வது.. அரசியல் ஆக்கப்படும் பட்சத்தில் எத்தனையோ கேள்விகள் உருவாகும் என்று தோன்றவில்லையா? கட்சி செலவு என்று ஆரம்பத்திலேயே ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு என்ன பதில்?
அப்படியே போனாலும் குடும்ப உறுப்பினர்கள் செல்வதற்கு எதற்கு கட்சி செலவு செய்ய வேண்டும்? இன்னொரு பக்கம் அரசு முறை பயணத்தில் செல்லும் அதிகாரிகளை கட்சி செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்? எங்கேயோ ஒரு கோளாறு ஆரம்பித்து அது பல்வேறு கோளாறுகளில் கொண்டுபோய் விட்டுள்ளது. விமானப்பயணம் என்பதெல்லாம் இன்று ஓரளவு வசதி படைத்த நடுத்தர மக்களுக்கே இன்று எளிதாக வசப்படும் நிலையில், ஒரு விமானப் பயணத்தை இந்த அளவுக்கா கந்தல் கோலம் ஆக்குவது?

அக்கறையும் இல்லை. அரசியலும் இல்லை. தானும் அரசியலில் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ள

இரண்டுமே இல்ல , அண்ணாமலைக்கு ஒத்து ஊதுகிறார்.
இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.