தமிழ்நாடு

முதலமைச்சர் பழனிசாமி சென்றபோது லிப்டில் கோளாறு..!

முதலமைச்சர் பழனிசாமி சென்றபோது லிப்டில் கோளாறு..!

Rasus

சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி சென்றபோது லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அவர் லிப்டில் காத்திருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் மதுரை செல்ல இருந்தார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் உள்ள லிப்டில் முதலமைச்சர் பழனிசாமி சென்றபோது லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டு இடையில் நின்றதாக கூறப்படுகிறது. இதனால், சிறிது நேரம் அவர் லிப்டில் காத்திருந்தார். சிறிது நேரத்திற்கு பின் லிப்டில் இருந்து முதலமைச்சர்  பழனிசாமி பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டார். பிறகு அவர் விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் பயணம் செய்தபோது லிப்டில் ஏற்பட்ட கோளாறால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.