Mullai periyar Dam PT
தமிழ்நாடு

தமிழகத்தின் 5 மாவட்டங்களின் உயிர்நாடி! முல்லைப் பெரியாறு தண்ணீர் திறந்த நாளில் கொண்டாட்டம்!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த 131 ஆம் ஆண்டை முன்னிட்டு பென்னிகுயிக் மணிமண்டபத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்.

PT WEB

தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை.

இந்த ஐந்து மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட 131 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில் லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், லோயர் கேம்பில் உள்ள முல்லைப் பெரியாற்றில் மலர்தூவி மரியாதையும் செலுத்தினர்.

Benny cook statue

ஐந்து மாவட்டங்களில் நீராதராமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை ஆங்கிலேயப் பொறியாளர் பென்னிகுயிக்கால் 1895ல் கட்டிமுடிக்கப்பட்டது.

அதே ஆண்டு (இந்திய நேரப்படி) அக்டோபர் 10 & 1895 மாலை 6.00 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வென்லாக், தேக்கடிக்கு வந்து பெரியாறு அணை தண்ணீரைத் தமிழகப் பகுதிக்கு திறந்துவைத்தார். அன்றிலிருந்து இன்று வரை 131 ஆண்டுகளாக தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் கொடுத்து தமிழகத்தை காத்து வருகிறது பெரியாறு அணை.

Mullai periyar Dam

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நாளான அக்டோபர் 10ஐ, தென் மாவட்டங்களிலுள்ள பொதுமக்களும், விவசாயிகளும் கொண்டாடி வருகின்றனர். இதை முன்னிட்டு நேற்று ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தைச் சார்ந்த விவசாயிகள் லோயர் கேம்ப் பென்னிகுக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து லோயர் கேம்ப் அருகே உள்ள குருவனூத்து பாலத்தில் முல்லைப் பெரியார் தண்ணீரில் மலர் தூவி மரியாதை செய்தனர். பின் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பென்னிகுக் அவர்களை நினைவுகூர்ந்தனர் . இதில் கலந்து கொண்ட அனைவரும் பென்னிகுக் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.