ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க உதவிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் குன்னூர் மக்களுக்கு, லெஃப்டினன்ட் ஜெனரல் அருண் நன்றி தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிக்கு உதவியர்களுக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் நடந்த பாராட்டு நிகழ்வில் பேசிய அவர், விபத்து நேர்ந்த 10-வது நிமிடத்தில் இருந்து மக்கள் உதவி புரிந்ததாக கூறினார். விபத்து நடந்த பகுதியில் வசித்த மக்கள் நெருப்பை அணைத்து மீட்புப்பணிக்கு பெரிதும் உதவியதாக கூறிய லெஃப்டினன்ட் ஜெனரல் அருண், நெருக்கடி நேரத்தில் உதவிக்கு வந்த மக்களின் செயல் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ஆம் தேதி நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண், ஹெலிகாப்டர் விபத்து விவகாரத்தை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் கையாண்டதாக கூறினார்.