தமிழ்நாடு

சிறப்பான வகையில் திமுக ஆட்சி நடக்கட்டும் -திமுகவுக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து

சிறப்பான வகையில் திமுக ஆட்சி நடக்கட்டும் -திமுகவுக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து

kaleelrahman

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மதுரை ஆதீனம் வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும்; தெரிவித்துக்கொள்கிறோம்.

அமையவிருக்கும் அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சிறப்பான வகையில் திமுக ஆட்சி நடக்கட்டும் எல்லோருக்கும் ஆசீர்வாதம் என மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.