தமிழ்நாடு

“மத்திய அரசின் உதவியை பெற்று மாநில வளர்ச்சிக்கு பணியாற்றுவோம்!” - வானதி சீனிவாசன்

EllusamyKarthik

கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் “மத்திய அரசின் உதவியை பெற்று மாநில வளர்ச்சிக்கு பணியாற்றுவோம்” என தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்திருந்தார். தனக்கு வாக்களித்த வாக்கள் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இதே தொகுதியில் போட்டியிட்டு 51481 வாக்குகளை பெற்றார். அவரை விடவும் வானதி சீனிவாசன் 1728 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.