மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் “தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மாற்றம் கண்டிப்பாக தேவை. சிஷ்டம் சரியில்லை. அதை சரிசெய்ய படித்தவர்கள், இளைஞர்கள், நல்லவர்கள் முன்வர வேண்டும். அரசியல் மற்றும் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. ஆட்சிக்கு ஒரு தலைமை கட்சிக்கு ஒரு தலைமை” என்ற தன்னுடைய கட்சி நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
மேலும் “ பதவிக்காக வருபவர்கள் என்னுடன் வரவே வேண்டாம். பொதுசேவைக்காக வருபவர்கள் வரட்டும் என்பதே என் கொள்கை” என்று பேசியிருந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தலைவர் தலைமயில் அரசியல் புரட்சிக்கு ஒன்றிணைவோம் என எழுதப்பட்டுள்ளன.