ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே எல்லைகட்டை கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இருவர் சிறுத்தையால் தாக்கப்பட்டனர்.
சிவராஜ், சித்தராஜ் ஆகியோர் தோட்டத்தில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியிருக்கிறது. அருகிலிருந்தவர்கள் விரட்டியதை அடுத்து சிறுத்தை ஓடியிருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீப்பந்தத்தை கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் சிறுத்தையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் முயற்சித்தனர். கால் தடத்தை வைத்து சிறுத்தை அதன் குட்டியுடன் நடமாடுவது உறுதியாகியுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.