தேவாலயங்கள் Pt web
தமிழ்நாடு

கிறிஸ்துவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது.. தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை!

ஈஸ்டர் பண்டிக்கைக்கு 40 நாட்களுக்கு முன்பாக தொடங்கப்படும் கிறிஸ்துவர்களின் தவக்காலம், பவ்வேறு தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலியுடன் இன்று துவங்கியது.

Premkumar S

கிறிஸ்துவர்கள் உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர், இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்தலை நினைவுகூரும் நாள். 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கி, ஏப்ரல் 3 புனித வெள்ளி, ஏப்ரல் 5 ஈஸ்டர் பண்டிகை என கொண்டாடப்படும். இந்த காலத்தில், கிறிஸ்துவர்கள் தியாகத்தை நினைவுகூர்ந்து சிறப்பு ஆராதனைகளில் ஈடுபடுகின்றனர்.

இயேசுக் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, அன்றிலிருந்து 3வது நாள் இயேசு உயிர்த்தெழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நாளை உலகெங்கிங்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இது, உயிர்ப்பு ஞாயிறு எனவும் அழைக்கப்படுகிறது. இந்த சூழலில், ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை கிறிஸ்துவர்கள் தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள். இக்காலங்களில், இயேசுக் கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூர்ந்து, சிறப்பு ஆராதனைகளில் கிறிஸ்துவர்கள் ஈடுபடுவார்கள்.

கிறிஸ்துவர்கள் வழிபாடு

தொடர்ந்து, 40 நாட்களின் முதலாவது நாளான புதன்கிழமையன்று ஆண்டு தோறும் சாம்பல் புதன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று, தேவாலயங்களில், “மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய். மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய், மறவாதே” என சொல்லியவாறு பாதிரியார்கள் கிறிஸ்துவர்களுக்கு சாம்பலை நெற்றியில் சிலுவை அடையாளமிட்டுத் தவக்காலத்தை தொடங்கி வைப்பார்கள்.

இந்த நிலையில், இந்த வருடம் ஏப்ரல் 3ஆம் தேதி புனித வெள்ளியும், ஏப்ரல் 5ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில், 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியிருக்கிறது. அதனையொட்டி, பவ்வேறு தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலியுடன் இன்று துவங்கியது. இந்தக் காலங்களில் இறைமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து முக்கியமான ஆலயங்களுக்கு திருப்பயணம் செல்வதை கடைபிடித்துவருகிறார்கள்.