தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதால் விட்டாச்சு லீவு

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியதால் விட்டாச்சு லீவு

Rasus

விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடி வருவதால் கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு காலவரம்பற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வருவதால் கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு காலவரம்பற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லைக்கழக துணைவேந்தர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மூன்றாம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு காலவரம்பற்ற விடுமுறை அளிக்கப்படுவதாவும், அதேசமயம் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.