தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Sinekadhara

மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(12.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை விடாமல் தொடர்ந்து பெய்துவருகிறது. கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மேலும் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளையும்(12.11.2021) சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.