தமிழ்நாடு

2வது நாளாக நீதிபதி தஹில் ரமாணி முன் வழக்கு விசாரணை இல்லை 

webteam

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னையில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இடமாற்றம் வேண்டாம் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தனது பதவியை தஹில் ரமாணி ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

இதனிடையே தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னையில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி அமர்வில் 2 வது நாளாக வழக்குகள் பட்டியலிடப்படவில்லை. வழக்குகள் பட்டியலிடப்படாத அறிவிப்பை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். வழக்குகளை 2வது நீதிபதிகள் அமர்வான வினீத் தோத்தாரி, சரவணன் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.