திருச்சியில் காதலிக்க மறுத்ததாக கூறி சட்டக் கல்லூரி மாணவி மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
அந்த மாணவிக்கு 40 முதல் 45 சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிய தவச்செல்வன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.