தமிழ்நாடு

தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை!

தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை!

webteam

கொரோனா ஒருபுறம் அச்சுறுத்தி வரும் அதேவேளையில் வெயிலும் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கினாலும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மணம்பூண்டி. அரகண்டநல்லூர். தேவனூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழையும், புதுக்கோட்டை நகர் பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.

தமிழகத்தில் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவி வருகிறது.