சென்னையில் நடந்த பாரத் யாத்ரா விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் லதா ரஜினிகாந்த். இந்தப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி புதுடில்லி வரை சென்று முடிவடைய உள்ளது.
குழந்தைகள் மீதான சமூக குற்றங்கள், பாலியல் கொடுமைகள், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது சம்பந்தமான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவது இதன் நோக்கமாகும். செப்டம்பர் 11ம் தேதி குமரியில் தொடங்கும் இப்பயணம் அக்டோபர் 15 அன்று டெல்லியில் போய் முடிய இருக்கிறது. ஏறத்தாழ 22 மாநிலங்கள் வழியாக 11 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இப்பயணம் செல்ல இருக்கிறது.
இன்று சென்னை வந்த பேரணி இங்கிருந்து டெல்லி நோக்கிச் செல்கிறது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் இப்பயணத்தை கொடி அசைத்து லதா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். அவருடன் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா மற்றும் நோபல் பரிசுப் பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.