தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மண்டலத்தில் அதிக அளவு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 12 ஆயிரத்து 110 கோடியே 74 லட்சம் ரூபாய் பயிர்க் கடன் நிலுவையில் உள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கான தஞ்சை, திருச்சி, கும்பகோணம் கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 400 கோடி நிலுவைத் தொகை உள்ளது. அதிகபட்சமாக சேலம் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற 1329 கோடி ரூபாய் பயிர் கடனும், ஈரோடு கூட்டுறவு வங்கியில் ஆயிரத்து 42 கோடி ரூபாய் பயிர் கடனும் நிலுவையில் உள்ளன.