தமிழ்நாடு

நடுக்கடலில் எல்லைப் பலகை: இலங்கை நடவடிக்கை

webteam

எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் நடுக்கடலில் எல்லைப் பலகையை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி வருவதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் சிறைப்பிடிப்பதும் அதிகரித்து வருகிறது. படகுகளையும் சிறைபிடித்து சென்றுவிடுகின்றனர். இதைத் தடுக்கும் விதமாக இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்கும் வகையில் எல்லைப் பலகையை இலங்கை அரசு வைத்துள்ளது.

இலங்கையில் இருந்து 5-வது மணல்திட்டில் இலங்கை கொடியுடன் இந்தப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷ்கோடியில் இருந்து 5வது மணல்திட்டில் இந்திய அரசு பலகை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.