தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கால் மூழ்கிய நொய்யல் ஆற்றின் தரைப்பாலம்

வெள்ளப்பெருக்கால் மூழ்கிய நொய்யல் ஆற்றின் தரைப்பாலம்

webteam

திருப்பூர் நொய்யல் நதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் ஆண்டிப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு நொய்யல் நதியில் நீர் சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். எனினும் ஆண்டிபாளையம்-கல்லூரி சாலைகளை இணைக்கும் அணைப்பாலம் வெள்ளத்தின் காரணமாக நீரில் மூழ்கியதால் முற்றிலும் இந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சுமார் 10 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் கொண்ட மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.