பரந்தூர்
பரந்தூர் கூகுள்
தமிழ்நாடு

பரந்தூரில் புதிய விமான நிலையம்: நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பு வெளியீடு

PT

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கு நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையைம் இந்தியாவில் மிக முக்கிய விமானநிலையங்களில் ஒன்று. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் உலகம் முழுவதும் சென்று வரும் ஒரு இடம். இந்நிலையில் சென்னையில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலால், சென்னை விமானநிலையத்தை விரிவுபடுத்தும் பொருட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்களை அரசு தேர்ந்தெடுத்தது.

இதில் பரந்தூர் கிராமம் விமானநிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடமாக இருந்ததால் அங்கு விமானநிலையங்கள் அமைப்பதற்கு அரசு முடிவெடுத்தது. இதற்கு பரந்தூர் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

பரந்தூர் கிராம மக்கள்

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தின் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய ஐந்தாயிரத்து 476 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

அதேநேரம், பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பரந்தூர்

விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பதற்கான முதல் நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் பொடாவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலம் குறித்த பாத்தியாதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் குறித்து ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.