ஓசூரில் காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பெண் ஒருவர் நிறுத்தி முகக்கவசம் இல்லாமல் உங்கள் முகத்தை காண வேண்டும் எனக்கூறிய சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.
சாலையோரம் காத்திருந்த பெண் ஒருவர் முதல்வரின் கார் நெருங்கும் போது, உங்கள் முகத்தை காண வேண்டும் முகக்கவசத்தை கழட்டுங்கள் என கோரிக்கை விடுத்தார். முதலமைச்சர் முகக்கவசத்தை கழட்டியதை அடுத்து விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி அதற்கு பெயர் ஸ்டாலின் என அப்பெண் கூறினார்.